திருமணம் எனும் தொழிற்சாலை

11062728_820188154743530_3147727654348459300_n

திருமணம் என்ற நிகழ்வு பெண்ணும் மாப்பிள்ளையும் இவர்கள் தான் என்று முடிவான தருணத்தில் இருந்து தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து திருமணத்திற்கு நாள் குறித்தல், மண்டபம் முடிவு செய்தல், திருமண அழைப்பிதழ், பந்தல், சமையல், மண்டப அலங்காரம், மணப்பெண் மணமகன் அலங்காரம், புகைப்படம், வீடியோ இப்படி பல்வேறு தொழிலைசார்ந்தவர்களை ஒன்றிணைத்து சம்பந்தி வீட்டுக்காரர்களிடம் சபாஷ் வாங்குவது என்பது இமயமலையை இடம் மாற்றி வைப்பதற்கு சமமாகும். எவ்வளவு தான் பார்த்து பார்த்து செய்தாலும் குறை சொல்ல சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை விட்டு விடுவோம்.05

சரி, இப்போ இதை எழுதுவதற்கு என்ன அவசியம்னு நீங்க கேட்குறது புரியுது. பெங்களூருவில் இம்மாதம் 21ம் தேதி நடைபெற்ற Wedding Industry Meetup நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு திருமணம் என்ற நிகழ்வு மேற்குறிப்பிட்ட நடைமுறையில் இருந்து எவ்வளவு மாறி இருக்கிறது என்பது தெளிவானது. வெட்டிங் பிளானர் (Wedding Planner) என்று கூறப்படும் திருமண அமைப்பாளர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோகிராபர்கள், ஒப்பனை கலைஞர்கள், மேடை அலங்கார கலைஞர்கள் இப்படி ஒரு திருமணத்தில் யாருடைய சேவைகள் தேவைப்படுமோ அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட கூட்டம் தான் அது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நானும் என்னுடைய நண்பரும் சென்றிருந்தோம். கூட்ட அரங்கத்தினுள் செல்லும் முன் துறை வாரியாக ஒவ்வொருவருக்கும் பொத்தான்கள் கொடுக்கப்பட்டது, அதை அணிந்து கொண்டு உள்ளே சென்றோம். அரங்கத்தினுள் கூடியிருந்த ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள். ஒவ்வொருவரும் அணிந்திருந்த பொத்தானை பார்த்து அவர்களாகவே தங்களை அறிமுகம் செய்து கொண்டு தங்கள் துறை குறித்து சிறிய விளக்கம் அளித்தார்கள். தங்களுடைய பிசினஸ் கார்ட்களை பரிமாறிக்கொண்டனர். தங்களுடைய சேவைகள் தேவைப்படும் பட்சத்தில் தொடர்பு கொள்ள இருவரும் கேட்டுக்கொண்டு விடைபெற்றுசென்றனர். இவ்வாறு அங்கிருந்த சுமார் 500 நபர்களுடனும் உரையாடி பரஸ்பரம் அறிமுகமாகிக்கொண்டனர். நாங்கள் இருவரும் கூட இதையே பின்பற்றி ஒவ்வொருவருடனும் அறிமுகமாகிக்கொண்டோம். இதைத்தொடர்ந்து சம்ப்ரதாய மேடை பேச்சுகள் நடந்தன. 06

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் புகைப்படத்துறையை சார்ந்துள்ள எனக்கு ஒரு விஷயம் தெளிவானது. திருமணங்களை மட்டும் எதிர்நோக்கியுள்ள புகைப்படக்கலைஞர்களுக்கு எதிர் வரும் காலங்கள் நல்ல தொழில் வாய்ப்புகளை நிச்சயம் தரும் என்பது தான். பொதுவாக திருமண நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்யும் புகைப்படக்கலைஞர்களுக்கு விளம்பரம் மற்றும் ஃபேஷன் புகைப்படக்கலைஞர்கள் மீது ஒரு பொறாமை இருந்து கொண்டே இருக்கும். இவர்களைப்போல் நாம் எப்போது புகைப்படம் எடுக்க போகிறோம் எப்போது லட்சங்களில் சம்பாதிக்க போகிறோம் என்று. அந்த பொறாமைக்கான அவசியமே இல்லை. இன்றைக்கு உள்ள சூழலில் திருமண நிகழ்வுக்காக மண வீட்டார் பணங்களை அள்ளி வீசத் தொடங்கிவிட்டனர். அதை நாம் எப்படி நமக்கு சாதகமாக்கிக்கொள்ளவேண்டும் என்று சிந்தித்தாலே உள்ளூரில் உள்ள புகைப்படக்கலைஞர்களும் லட்சங்களில் சம்பாதிக்கலாம். புதிதாக காமிரா வாங்கிக்கொண்டு Candid Photography எடுப்பவர்களை பார்த்து காதில் புகை வராமல் அந்த Candid Photography என்றால் என்ன எவ்வாறு காட்சிகளை படமாக்க வேண்டும் என்று படித்துக்கொண்டு களத்தில் குதித்து விடவேண்டும். புதுப்புது நுணுக்கங்களை கற்றுக்கொள்ளவேண்டும், பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ளவேண்டும். சம்பாதிப்பதில் ஒரு சிறு பகுதியை படிப்பதற்கு ஒதுக்க வேண்டும். தினசரி புதுப்புது தொழில் நுட்பங்கள் உருவாகிக்கொண்டே வருகிறது அதை நாமும் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

02

இன்னும் கொஞ்சம் அதிகமாக சிந்தித்தால் திருமண நிகழ்வில் யாரெல்லாம் தங்கள் சேவைகளை கொடுக்கிறார்களோ அவர்கள் எல்லாம் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி மணவீட்டாருக்கு எந்தவித வேலையையும் கொடுக்காமல் ஒரு திருமண நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தால் அதுவே அவர்களுக்கு அடையாளத்தை கொடுக்கும். இந்த செயல்முறை காஸ்மோபாலிடன் நகரங்களில் தற்போது நடைமுறையில் இருக்கிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வரவில்லை. வந்தால் அதை வரவேற்க மக்கள் தாயாராகவே இருக்கிறார்கள். நாமும் உயர்ந்து நம்மோடு இருப்பவர்களையும் சேர்த்து உயர்த்தினால் அதன் மூலம் கிடைக்கும் லாபம் என்பது கூடுதல் சிறப்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

08

திருமணம் என்ற நிகழ்வு அண்டசராசரம் இருக்கும் வரையில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே தான் இருக்க போகிறது.  எனவே, வரும் காலம் வசந்த காலமே…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s