இதயம் வேண்டும் எங்களுக்கு…

p71செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதய பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிகளை வழங்கியது.

இதய பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிகளை வழங்கிய எத்தனை ஊடகங்களுக்கு தெரியும் தங்களின் செய்திப்பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் எத்தனை பேர் இதய நோயால் பாதிக்கபட்டுள்ளனர் எத்தனை பேர் அதை எதிர்நோக்கியுள்ளனர் என்று. இதய நோய்க்கு முக்கிய காரணமாக கூறப்படுவது வேலைப்பளுவினால் ஏற்படும் மனஅழுத்தம்.  மனஅழுதத்தை குறைக்க மதுவை நாடிச்செல்வது என தொடர்கிறது.

அச்சு ஊடகங்களைவிட மின்னணு ஊடகங்களில் பணியாற்றும் மாவட்ட அல்ல தாலுகா செய்தியாளர்களே மிக அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். உள்ளூரில் நடக்கும் சாதாரண நிகழ்வை முதலில் அழுவலகத்தின் ஸ்க்ரோல் பிரிவுக்கு சுருக்கமாக செய்திகளை தெரிவித்துவிட்டு நிகழ்வு நடக்கும் இடத்திற்கு சென்று காட்சிகளை பதிவு செய்து பின்னர் தங்களுடைய இடத்திற்கு வந்து அந்த பதிவை எடிட் செய்து எப்.டீ.பீ. இல் அப்லோட் ஆக விட்டு செய்தியை எழுதி அனுப்பி விஷுவல் வந்துச்சா, ஸ்கிரிப்ட் வந்துச்சா என்று கேட்டு நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு சராசரியாக மூன்று மணி நேரம் ஆகும். இந்த மூன்று மணி நேரத்திற்குள் அலுவலகத்தில் இருந்து எத்தனை அலைபேசி அழைப்புகள் வந்தது என்பது கணக்கு கிடையாது. இந்த மூன்று மணி நேரத்தில் ஒரு டீ ஒரு வடை மட்டுமே வயிற்றிற்குள் சென்றிருக்கும். அதுவும் போகும் இடங்களை பொறுத்து.

இதே ஒரு விபத்து போன்ற அசாதாரண நிகழ்வுகள் என்றால் அந்த செய்தியாளரின் கதி அதோ கதி தான். அலுவலகத்தில் தகவல் சொல்லிவிட்டு சம்பவ இடத்திற்கு போவதற்குள் செய்தி ஒருங்கிணைப்பு பணியில் உள்ளவர்கள் செய்தியாளரை துரத்த ஆரம்பித்து விடுவார்கள். சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னரே விஷுவல் அனுப்பியாச்சா என்று கேட்பார்கள். அப்போது வரும் கோபத்திற்கு அளவே இருக்காது.   சம்பவங்களை வீடியோ பதிவு செய்து செய்தியை சேகரித்துக்கொண்டு மேல சொன்ன பிற வேலைகளையும் அவர் செய்து முடிப்பதற்குள் காதில் வைத்த போனை எடுத்திருக்கவே மாட்டார். சொந்தமாக கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வைத்திருந்து எடிட்டிங் மற்றும் செய்தியை கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருந்தால் தப்பித்தார். எடிட்டிங் செய்யவும் செய்தியை டைப்பிங் செய்ய வேறு ஒருவரை நம்பியிருந்தால் அவர்கள் படுத்தும் பாடு இன்னும் கொடுமையாக இருக்கும்.

இதே பாணியில் உணவை துறந்து உறக்கத்தை துறந்து குடும்பத்தினரை மறந்து  மூன்று வருடங்கள் வேலை பார்த்தால் போதும் அழையா விருந்தாளியாக ரத்த அழுத்த நோய் எட்டிப்பார்த்திருக்கும். அதை சரியான நேரத்தில் கவனித்து இருந்தால் மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். கவனிக்காமல் விட்டுவிட்டால் மாரடைப்பு தான்.

செய்தி நிறுவனங்கள் எப்போதும் தங்களின் TRP உயர்த்துவதிலேயே குறியாக இருக்கும். அந்த TRP க்காக உழைக்கும் ஊழியனின் உடல் நிலையை பற்றி எந்த கவலையும் இல்லை. தனக்காக உழைக்கும் ஊழியனின் நலனில் அக்கறை இல்லாத செய்தி நிறுவனங்களுக்கு ஊருக்கு உபதேசம் செய்ய யோக்கியதை இருக்கிறது.

செய்தியாளர் என்ற அடையாளத்துடன் ஊருக்குள் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு, அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலீஸ் என்ற எல்லா மட்டத்திலும் பழக வாய்ப்பு கிடைப்பதால் குறிப்பாக கேள்வி கேட்கும் தகுது இருப்பதால், அதில் அலாதி இன்பம் அடைந்து தன்னுடைய உடலைப்பற்றி கண்டு கொள்வதேயில்லை.

இதே போல செய்தியாளர்கள் செய்தி நிறுவனங்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்தால் அவர்கள் நோகாமல் நுங்கு தின்பார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s