வைல்ட்லைப் போட்டோகிராபி vs இளைஞர்கள்

Sacrifices-of-wildlife-photography

கடந்த வாரம் எங்கள் பிக்ஸ்டாக் புகைப்பட குழுமம் நடத்திய புகைப்பட பயிற்சி வகுப்பில் புகைப்பட துறையில் ஆர்வம் கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முடிந்த பின்னர் கேள்வி பதில் நேரத்தில், வரும் நாட்களில் எந்த பிரிவில் புகைப்படப்பயிற்சி உங்களுக்கு தேவைப்படும் என்று கேட்ட போது, அவர்களிடம் இருந்து வந்த பதில் வைல்ட்லைப் போட்டோகிராபி, நேச்சர் போட்டோகிராபி என்று கோரஸாக பதில் வந்தது.

ஒரு கோணத்தில் இந்த பதில் இயற்கையின் மீது மாணவர்களுக்கு  இருக்கும் ஆர்வத்தை பிரதிபலிப்பதாக இருந்தாலும், மற்றொரு கோணத்தில் இவர்கள் இன்னும் ஒரு மாயை உலகுக்குள் இருப்பதாகவே தெரிகிறது.   வைல்ட்லைப் போட்டோகிராபியில் பேர் பெற்ற போட்டோகிராபர்கள் சொல்வது இந்தியவில் உள்ள காடுகள்  வைல்ட்லைப் போட்டோகிராபிக்கு சரியான இடம் இல்லை என்று. மேலும் வைல்ட்லைப் போட்டோகிராபியில் ஈடுபட்டுள்ள போட்டோகிராபர்கள் பலரும் அரசு மற்றும் தனியார் துறைகளில் மிகப்பெரிய பதவியில் இருந்துகொண்டு லட்சங்களில்  சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். அல்லது நல்ல சம்பாதித்து ஓய்வு பெற்றவர்களாக இருப்பார்கள். ஏனென்றால்  வைல்ட்லைப் போட்டோகிராபிக்கு தேவையான கேமரா மற்றும் உபகரணங்கள், முக்கியமாக டெலிபோட்டோ லென்ஸ்களின் விலை லட்சங்களில் தான் இருக்கும். வாழ்க்கைக்கு தேவைப்படும் பணத்திற்கு அதிகமாக சம்பாதிப்பவர்களால் விலை உயர்ந்த கேமரா மற்றும் உபகரணங்களை வாங்க முடியும். லட்சங்களில் முதலீடு செய்து வைல்ட்லைப் போட்டோகிராபியில் ஈடுபட்டுள்ள போட்டோகிராபர்கள் அனைவரும் அதில் இருந்து சம்பாதிப்பது மிகவும் குறைவு. இவர்கள் அனைவரும் வைல்ட்லைப் போட்டோகிராபியை ஒரு பொழுதுபோக்குக்காகவே செய்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே வைல்ட்லைப் போட்டோகிராபி மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். அந்த வருமானத்தை ஈட்ட அவர்கள் கடந்து வந்த காலம் மிக அதிகமானதாக இருக்கும். குறைந்த வயதில் சில வைல்ட்லைப் போட்டோகிராபர்ஸ் இருக்காங்களே என்ற கேள்வி எழலாம். அதற்கு காரணம் அவர்களுடைய குடும்ப பின்புலம் நிச்சயம் வசதி மிக்கதாக இருக்கும்.

வைல்ட்லைப் போட்டோகிராபியின் எதார்த்தம் இப்படியாக இருக்கும் போது நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் அந்த திசையை நோக்கிசெல்வது வருத்தமளிக்கிறது. நம்முடைய குடும்ப நடைமுறை தந்தையின் வருமானத்தில் கல்லூரி வரை கல்வி பயிலும் குழந்தைகள் கல்லூரிக்கல்வி முடித்த பின்னர் வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கல்லூரி முடித்த பின்னர் கேமராவைத் தூக்கினால் கூட, உருப்புடுற வழியப்பாரு! என்று அன்பொழுக கூறும் அப்பாக்கள் சூழ்ந்த இவ்வுலகில், வைல்ட்லைப் போட்டோகிராபியில் உலக புகழ் அடைய போகிறேன் என்று கூறி அப்பாக்களின் சாபத்திற்கு ஆளாகாமல் கேமராவை தூக்கி அவரின் ஒரு மாத சம்பளத்தை ஒரே ஆர்டரில் சம்பாதிக்க வேண்டும். தெளிவான ஒரு பாதையை வகுத்துக்கொண்டு கேமராவை கையில் எடுங்கள்.

வாழ்த்துகள்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s