உருவாக்குவோம் உறவுகளை ! வாடிக்கையாளர்களை அல்ல !!

Building-Relationships-Not-Clients-Photographyவணக்கம் சார்,
சிவா – ஸ்ரீதேவிக்கு பெண்குழந்தை பிறந்திருக்கு.
நன்றி !
இப்படி ஒரு குறுந்தகவல் என்னோட கிளையன்ட் மொபைல் நம்பர்ல இருந்து வந்துச்சி. குறுந்தகவல் அனுப்பினவரோட அண்ணன் அண்ணி தான் அந்த சிவா – ஸ்ரீதேவி. தூத்துக்குடி அருகில் உள்ள எப்போதும்வென்றான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். உடனே நானும் மகிழ்ச்சி னு ரஜினி மாதிரி ஒரே வார்த்தைல சொல்லாம மிக்க மகிழ்ச்சி, ரெண்டு பேருக்கும் என்னோட வாழ்த்துகளை தெரிவியுங்கள்னு பதில் அனுப்பிட்டு யோசிச்சு பார்த்தேன். எதுக்கு குழந்தை பிறந்த செய்தியை போட்டோ புடிச்ச நமக்கு சொல்லனும்னு. போன வருஷம் கல்யாணம் நடந்த போது ஆல்பம் டெலிவரி கொடுத்து பணம் வாங்கி முடிக்கிற வரை நடந்த சம்பாஷணைகளுக்கு அப்புறம் வேறு எதற்கும் அவர் அழைக்க வில்லை.
91 – 2002  பிலிம் ரோல் காலங்களில் ஒரு குடும்பத்துல நிச்சயதார்த்த நிகழ்ச்சிய போட்டோ வீடியோ எடுத்து கொடுக்க ஆராம்பிச்சோம்னா, அடுத்து கல்யாணம், ஏழாவது அல்லது ஒம்போதாவது மாசத்துல வளைகாப்பு, அப்புறம் குழந்தைக்கு பேர் வைக்கிறது அல்லது கயிறு கட்டுறது, அடுத்த மூணு நாலு மாசத்துல குழந்தை குப்புற விழுந்தத படம் எடுக்க, ஒரு வருசத்துல பிறந்தநாள் அடுத்து மொட்டை போட்டு காதுகுத்து இப்படி தொடர்ச்சியாக ஒரு குடும்பத்தின் அத்தனை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு போட்டோ எடுத்து கொடுத்திருக்கிறோம். நம்ம போட்டோ அந்த குடும்பத்தாருக்கு பிடிச்சிருந்து அந்த குடும்பத்தாரோட ஒரு நல்லுறவு அமைஞ்சுதுன்னா  அவங்களோட  உறவுக்காரங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் நம்மள பரிந்துரைப்பாங்க.  அப்படியே அந்த உறவும் தொடர்ந்தது  நம்முடைய  தொழிலும்  வளர்ந்தது. குடும்ப டாக்டர் மாதிரி குடும்ப போட்டோகிராபர்னு அடையாளம் நமக்கு கிடைக்கும்.    
ஆனால் இன்றைய சூழல் அப்படி இல்ல. நிச்சயதார்த்த நிகழ்ச்சிய போட்டோ எடுத்த போட்டோகிராபர கல்யாணத்துல நிகழ்ச்சில பார்க்க முடியல. ஏன்னா அவரைவிட வேற யாராச்சும் ஒருத்தர் விலைய குறைச்சு பேசி கல்யாண ஆர்டர தட்டிட்டு போய்டுறார். இல்லேனா நண்பர்கள் சிபாரிசின் பேரில் வேறு ஓர் போட்டோகிராபர் மற்றும் வீடியோகிராபர் கல்யாண ஆர்டர வாங்கிடுறாங்க. இன்னும் சில இடங்களில் கல்யாண ஆல்பத்த குழந்தை பொறந்ததுக்கு அப்புறமாவும் கொடுக்காத காரணத்தாலும் அந்த குடும்பம் மறுபடியும் அந்த போட்டோகிராபர் கிட்ட போறதே இல்ல.
மற்ற தொழில்களைப் போல புகைப்படத்தொழில் கிடையாது. தேவைப்படும் நேரத்தில் என்ன கிடைக்கிறதோ அதை எங்கே வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்பது போல. வாடிக்கையாளருக்கும் போட்டோகிராபருக்கும் இடைய ஒரு கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகி, என்ன இருந்தாலும் அவன் எடுக்கிற போட்டோ மாதிரி இல்லையேனு    சொல்லவைக்க ஒரு போட்டோகிராபர் எவ்ளோ காலம் எடுத்துக்க வேண்டியதிருக்கும் தெரியுமா? வருடங்கள் ஆகலாம். அந்த நம்பிக்கையை சம்பாதிக்க தொழில் திறமை இருந்தால் மட்டும் போதாது. நல்லுறவை வளர்த்துக்கொள்ளும் திறமையும் வேண்டும். இந்த நல்லுறவு என்பதில் நம்முடைய பழக்கம், பேச்சு, பண மேலாண்மை, நேர மேலாண்மை, உண்மைத்தன்மை உள்ளிட்ட பல அடங்கி இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தேவை நல்ல புகைப்படமாக இருந்தாலும் அவர்களுடனான நல்ல உறவு அந்த புகைப்படத்திற்கு கூடுதல் உயிரோட்டம் தருவாக இருக்கும்.  
ஒரு குறுந்தகவல் வந்ததுக்கு இதெல்லாம் எதுக்கு சொல்லிக்கிட்டுனு நீங்க கேட்கலாம். ஒரு தகவலை யாருக்கு சொல்லணும் யாருக்கு சொல்ல வேண்டாம்னு நாம ஒரு வரையறை வச்சிருப்போம் இல்லையா? அந்த கோணத்தில் பார்க்கும் பார்க்கும் போது தகவல் சொல்ல வேண்டிய லிஸ்டில் என்னுடைய பெயரும் இருக்கிறது என்பதில் எனக்கு ஒரு சந்தோசம். ஏதோ ஒருவகையில் அவர்களுக்கும் எனக்குமான நல்லுறவு தொடர்ந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.
வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறுவதில் காட்டும் அக்கறையை விட அவர்களுடைய மனங்களில் இடம் பிடித்து உறவை வளர்த்துகொள்வதில்   கொஞ்சம் கூடுதல் அக்கறை காட்டினால் நம் தொழில் அபரிமிதமான வளர்ச்சி பெரும் என்பதில் ஐயம் இல்லை.     

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s